உக்ரைன் ராணுவம் இந்திய மாணவர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை ரஷ்யா எழுப்பியுள்ளது.
ரஷ்ய படைகள் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள கார்கில் நகரில் சிக்கி தவிக்கின்ற இந்திய மாணவர்களை வெளியேற்றுவது குறித்து, ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்நிலையில், இதுகுறித்து ரஷ்ய அதிபர் புதின் தரப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் ரஷ்யா வழங்கும் என உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், சில மாணவர்களை உக்ரைன் ராணுவம் பணயக் கைதிகளாக பிடித்து வைத்து, மனித கேடயங்களாக அவர்களை பயன்படுத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதை அடுத்து அம்மாணவர்களை உக்ரைன் ராணுவம் ரஷ்ய எல்லைக்கு செல்ல விடாமல் தடுத்து வருவதாகவும், பரபரப்பு குற்றச்சாட்டை ரஷ்யா வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்திய மாணவர்களின் பாதுகாப்புக்கு ரஷ்யா முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.