ஒடேசா நகரத்தின் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷ்ய ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பல நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதுமே கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலானது சுமார் 5 மாதங்களை கடந்துவிட்டது. உக்ரைன் நாட்டில் பல நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றது. இதனை அடுத்து மறுபுறம் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி மற்றும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைன் நாட்டில் உள்ள ஒடேசா நகர குடியிருப்பு கட்டிடம் மீது ரஷ்யா ராணுவ படையினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் கருங்கடல் பகுதியில் உள்ள ஸ்னேக் தீவிலிருந்து ரஷ்ய ராணுவ படைகள் வெளியேறிய மறுநாளே ஏவுகணை தாக்குதலை ஒடேசா நகரம் மீது நடத்தியுள்ளது.