உக்ரைன் மீது ரஷ்யாவின் போரானது கடந்த 10 மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோரி கேமரோவோ ஓப்லாஸ்ட் பகுதியில் உள்ள ரஷ்ய படை குழுவின் தளபதி செர்ஜி சிவிலியோவ் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதாவது உக்ரைனில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குமாறு கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நான் ஸ்டாவ்ரோபோல் நகரின் 274 -ஆவது படை பிரிவில் போர் பயிற்சியாளராக இருக்கின்றேன்.
இந்நிலையில் கெமரோவோ பிராந்தியத்தின் கவர்னரான செர்ஜி யெவ்கெனிவிச்சிடம் நான் முறையிட விரும்புகிறேன். அதாவது நீங்கள் எங்களுக்கு அனுப்பிய வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்கள் எதுவும் இல்லாமல் இருக்கின்றனர். அதனால் கிட்டத்தட்ட அவர்கள் பாதுகாப்பாக இல்லை. மேலும் அவர்களிடம் 2 உடல் கவசங்கள் மட்டுமே இருக்கிறது. உக்ரைன் பிரதேசத்தில் மிகவும் குளிராக இருப்பதினால் குளிரிலிருந்து பாதுகாக்கும் வெப்ப உள்ளாடைகள் விரர்களிடம் இல்லை.
அதனால் குளிரால் அந்த இளம் வீரர்கள் உறைந்து போகின்றனர் என அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் 4.27 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு குளிர்கால அவசர உதவியாக 1.1 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்க ஐரோப்பிய ஆதரவு நாடுகள் உறுதியளித்துள்ளது. மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையையடுத்து ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்கும் விதமாக இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.