ரஷ்ய படையெடுப்பில் இருந்து மீளும் வரை உக்ரைனுக்கு எங்களுடைய முழு ஆதரவையும் தருவோம் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, ராணுவம், பொருளாதாரம், மனிதாபிமானம் என அனைத்து வழிகளிலும் நாங்கள் உக்ரைனுக்கு உதவி செய்வோம். உக்ரைனுடனான எங்களின் வரலாற்று ஆதரவு நிச்சயம் தொடரும்.
இந்தப் போரில் இருந்து மீள்வதற்கு சிறிது காலம் எடுக்கும் அதுவரை உக்ரைனின் ஒரு பகுதியாக அமெரிக்கா விளங்கும். உக்ரைனை எதிர்க்க திட்டமிட்டிருக்கும் ரஷ்யாவின் பலன்களை குறைப்பதும், அவர்களின் நிதி அமைப்பின் மேலும் நிச்சயமற்ற தன்மையை உறுதிப்படுத்தும் தான் எங்களின் நோக்கம். ரஷ்யாவை பொறுப்புக்கூற வைப்பதற்கும் உக்ரைன் மக்களை ஆதரிப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்து காரியங்களையும் செய்வோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.