ஸ்வீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கியிருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது நாளாக இன்று தொடர்ந்து நடைபெறுகிறது. நேரடியாக இராணுவ படையை அனுப்பும் திட்டம் இல்லை என அமெரிக்கா மற்றும் நோட்டா கூட்டமைப்பு கூறியுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகள் தங்களை முற்றிலும் கைவிடுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் தனது இணையதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் “சுவீடன் அரசு தங்களுக்கு ராணுவ உதவிகளை வழங்கி உள்ளது.
மேலும் தொழில்நுட்ப ரீதியான உதவிகளையும் சுவீடன் அரசு செய்து வருகிறது . ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிரான வலுவான கூட்டணி அமைப்போம்” என அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்தது உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கியதன் காரணமாக சுவீடனுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றி ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா செய்தியாளர்களிடம் கூறிய போது “உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடன் பின் விளைவுகளை சந்திக்கும் மற்றும் நோட்டு அமைப்பில் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் முயற்சித்தால் மோசமான விளைவுகளை சந்திக்கும்” என தெரிவித்துள்ளார்.