Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு இன்னும் ரூ.6 ஆயிரம் கோடி ராணுவ உதவி…. பிரபல நாடு அறிவிப்பு…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர்கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உட்பட பல நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு ரஷ்யபடைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலிருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் ஆகிய பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த அடிப்படையில் உக்ரைனுக்கு முன்பாக 2.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவம் ஆயுதங்கள் உட்பட பல உதவிகளை அமெரிக்கா வழங்கி இருக்கிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு மேலும் 800மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்து உள்ளது. ராணுவடாங்கிகள், ஹெலிகாப்டர்கள், ராணுவ டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட பல ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்குகிறது. உக்ரைனுக்கு இப்போது அமெரிக்கா வழங்க திட்டமிட்டுள்ளள்ள ராணுவ உதவிகள் இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து கோடி ரூபாய் ஆகும்.

Categories

Tech |