Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு காலாவதியான ஆயுதங்களை வழங்கும் நேட்டோ நாடுகள்…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!

உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவதாக கூறி காலாவதி ஆயுதங்களை நேட்டோ நாடுகள் சப்ளை செய்து வருவதாக ஐநா-வுக்கான ரஷ்யப் பிரதிநிதி பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யப்படைகள் போர் தொடுத்து 56 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் கிழக்கு உக்ரைன் முழுதும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய பின் கீவ் நகரில் மீண்டும் தாக்குதலை நடத்த ரஷ்யப் படைகள் திட்டமிட்டுள்ளது. பின் அடுத்த சில நாட்களில் மரியுபோல் ரஷ்யாவின் கட்டுக்குள் வந்துவிடும் என்று ஐரோப்பிய அதிகாரி தெரிவித்து உள்ளார். அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து  பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போன்றோர் உக்ரைனுக்கு பீரங்கிகளை வழங்க உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு ரஷ்யஅதிபர் புடின் பொறுப்பேற்க வேண்டும் என ஜெர்மன் அதிபர் தெரிவித்தார்.

இதனிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது, “ரஷ்யாவின் போர் உலகப் பொருளாதாரத்தில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். கொரோனா தொற்றின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் பணவீக்கத்திற்கான மிகப்பெரிய காரணம் ரஷ்யா தான். கிட்டத்தட்ட 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போரால் உலகம் முழுதும் எரிவாயு விலைகள் மற்றும் உணவு விலைகள் அதிகரித்துள்ளன” என்று கூறினார். அத்துடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளியிட்ட வீடியோவில், “கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யபடைகள் தீவிர தாக்குதலை தொடங்கி இருக்கிறது. என்ன விலை கொடுத்தேனும் எதிர்தாக்குதல் நடத்தப் போகிறோம்” என்று கூறினார். இந்த நிலையில் ஐ.நாவுக்கான ரஷ்ய துணை நிரந்தரப் பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ், உக்ரைனில் நடைபெற்ற ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசியபோது “மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது.

ஆனால் அவை அனைத்தும் காலாவதியான ராணுவ உபகரணங்கள் ஆகும். இதனால் அதை ரஷ்யப்படைகள் எளிதாக அழித்துவிடும். நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதாக உறுதி அளிக்கும் அதே சமயத்தில், அவற்றை அழிக்கும் சக்தியை ரஷ்யா கொண்டு உள்ளது. புத்தம் புதிய தளவாடங்களை சப்ளை செய்வதாக நேட்டோநாடுகள் உக்ரைனுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. எனினும்  அவற்றையெல்லாம் ரஷ்யப்படைகள் அழித்துவிடும். அசோவ்ஸ்டல் ஆலையை கைப்பற்றிய சூழ்நிலையில் அங்கு தீவிரவாதிகள் உள்ளதாகவும், அவர்கள் மக்களை பிணைக் கைதியாக வைத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். அந்த ஆலையை கைப்பற்றி ஒருமாதமான சூழ்நிலையில் தற்போது ஏன் குறிப்பிடுகின்றனர்..? என்று பேசினார்..

Categories

Tech |