Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த ஆயுதம் வழங்கிய பிரபல நாடு…. வெளியான வீடியோ காட்சி….!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இந்த போரினால் உக்ரைனின் சில கிராமங்கள் நாசமாகி கிடந்தது. இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது.

இந்த போரை கடுமையாக எதிர்க்கும் அந்த நாடுகள் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதன்படி போலந்து சுய இயக்க பீரங்கியை உக்ரைனுக்கு வழங்கி உள்ளது. இது ரஷ்யாவை எதிர்த்து நிற்கும் உக்ரைனுக்கு மேலும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

Categories

Tech |