உக்ரைன் நாட்டில் போர் தொடங்கிய நாளில் இருந்து அந்நாட்டுக்கு சொந்தமான 470 டிரோன்களை தாக்கி அழித்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகமானது தெரிவித்துள்ளது. 136 விமானங்கள், 249 விமான ஏவுகணை தடுப்பு அமைப்புகள், 2,308 டாங்குகள் மற்றும் கவச போர் வாகனங்கள், 254 பல ஏவுகணை தாக்குதல் அமைப்புகள், 998 பீரங்கி துப்பாக்கிகள், சிறிய பீரங்கிகள், 2,171 சிறப்பு ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை தாக்கி அழித்து இருப்பதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைன் நாட்டின் 4 ராணுவ கட்டளை மையங்கள், 4பீரங்கி பேட்டரிகள், 2 எரிபொருள் கிடங்குகள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான உக்ரைனிய இலக்குகளை ரஷ்யபடைகள் அழித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories