Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு நிதியுதவி”…. ஒப்புதல் அளித்த உலக வங்கி …!!!

உக்ரைனுக்கு நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

ரஷ்யா தொடுத்துள்ள போரால் உக்ரைன்  நாடு நிலைகுலைந்து இருக்கிறது. அந்த நாட்டின் பொருளாதாரம் போரினால் சீர்கெட்டுப் போய் கிடக்கிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு உலக வங்கி தாராள மனதோடு நிதி உதவி செய்கிறது. அந்த நாட்டுக்கு 723 மில்லியன் டாலர் நிதி உதவி வழங்குவதற்கு உலக வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து உலக வங்கி நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது, உக்ரைனுக்கான கூடுதல் பட்ஜெட் ஆதரவு தொகுப்புக்கு  உலக வங்கியின் இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைனின் பொருளாதார அவசரநிலையை மீட்பதற்கான நிதி. மேலும்  கூடுதல் கடன் 350 மில்லியன் டாலராகும். 139 மில்லியன் டாலர் உத்ரவாதமாகவும்  134 மில்லியன்டாலர்  மானிய நிதியாகவும்  100 மில்லியன் டாலர் இணை நிதியுதவியாகவும்   மருத்துவ ஊழியர்களுக்கு ஊதியம், முதியோர் ஓய்வூதியம், பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு சமூக திட்டங்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்க உக்ரைன்  அரசுக்கு உதவும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |