Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு பேருதவியாக களமிறங்கிய துருக்கி”… தயார் நிலையில் மூன்று கப்பல்கள்…!!!!!!

துருக்கி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் கீழ் மேலும் 3 கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியதாக துருக்கி தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி 185 நாட்கள் முடிவுற்றுள்ளது. பொருளாதார ரீதியாக கடும் பின்னடைவை இரு நாடுகளும் எதிர் கொண்டு வருகின்றது. இந்த சூழலில் தானிய ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருந்த உக்ரைனுக்கு பேரு உதவியாக துருக்கியும் ஐக்கிய நாடுகள்  களமிறங்கிய நிலையில் இதுவரை ஒரு மில்லியன் டன் தானியங்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ளார். இதற்கிடையே துருக்கி தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தின் கீழ் மூன்று கப்பல்கள் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மேலும் மூன்று கப்பல்கள் தானியங்களையும் நிரப்பும் பணி முடிவடைந்து தயார் நிலையில் இருப்பதாக தகவல் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் துருக்கி ஐக்கிய நாடுகள் மன்றம் ரஷ்யா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகள் இஸ்தான்புலில் ரஷ்யா உக்ரைன் போரின் காரணமாக ஏற்றுமதியை நிறுத்தப்பட்ட மூன்று உக்ரைன் கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. இதனை அடுத்து உக்ரைன் துறைமுகங்களில் இருந்து தானியங்கள் வெளியேறத் தொடங்கி இருக்கிறது.

இதற்கிடையே உக்ரைன் மீதான படையெடுப்பு முன்னெடுக்கப்பட்டு 185 நாட்களை எட்டி இருக்கின்ற நிலையில் ரஷ்யாவின் போக்கு ஐரோப்பிய கண்டத்திற்கு ஆபத்தாக முடியும் என்ற சூழல் ஏற்பட்டிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கின்றார். மேலும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெள்ளிக்கிழமை பேசும்போது, zaporizhzhia அணுமின் நிலையத்தின் நிலைமை மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது. அதன் ஆறு உலைகளில் இரண்டு ஷெல் தாக்குதல்களை தொடர்ந்து முக்கிய அமைப்புடன் மீண்டும் இணைக்கப்பட்டதன் பின் தெரிய வந்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்ய துடுப்புகள் வெளியேற கட்டாயப்படுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு உக்ரைனிய ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

Categories

Tech |