உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது 8 மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இருப்பினும் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து துணிச்சலுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக உதவி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ள நிலையில் உக்ரைனுக்கு மேலும் 275 மில்லியன் டாலர் ராணுவ உதவிகளை அனுப்பியுள்ளது. மேலும் ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உட்பட பல்வேறு ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது.