ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தியிருப்பதாக அர்னால்ட் கூறியுள்ளார்.
உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் சமாதானம் செய்யும் மனநிலையில் இல்லை என அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து அவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் பயங்கரமான பேரழிவை ஏற்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த கடுமையான தாக்குதலின் காரணமாக தற்போது ரஷ்யாவை உலகநாடுகள் தனிமைப்படுத்தி உள்ளது” என அவர் கூறியுள்ளார்.