Categories
உலக செய்திகள்

உக்ரைனை விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. இந்த 5 வழித்தடங்களை பயன்படுத்த இந்திய தூதரகம் அறிவுறுத்தல்…?

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் பாதுகாப்பு நிலமை மோசமடைந்து வருவதால் உக்ரைனில் உள்ள மாணவர்கள் மற்றும் இந்திய குடிமக்கள் விரைவில் உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகின்றார்கள் என இந்திய தூதரகம் கடந்த வாரம் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற உக்ரைன்  எல்லையை கடக்க ஐந்து வழித்தடங்களை இந்திய தூதரகம் பகிர்ந்து இருக்கிறது. மேலும் இந்திய குடிமக்கள் உக்ரைன் எல்லையை கடக்க பின்வரும் ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அதாவது பாஸ்போர்ட், உக்ரைனிய குடியுரிமை, அனுமதி மாணவர் அட்டை அல்லது மாணவர் சான்றிதழ் மற்றும் விமான டிக்கெட் போன்றவற்றைக் கொண்டு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உக்ரைன் – ஹங்கேரி எல்லை, உக்ரைன் – ஸ்லோவேனியா எல்லை, உக்ரைன்- மால்டோவா எல்லை, உக்ரைன் – போலந்து எல்லை, மற்றும் உக்ரைன் – ருமேனியா எல்லை போன்ற வலிகளில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உக்ரைனில் இருந்து வெளியேறுமாறு இந்திய தூதரகம் கூறியுள்ளது. மேலும் இந்த எல்லை பகுதிக ளில் உள்ள சோதனை சாவடிகளின் பெயர்கள் மற்றும் இருப்பிடங்களை பகிர்ந்து இருக்கிறது மேற்கூறிய நாடுகளின் தூதரகங்களின் தொடர்பு எண்களையும் பகிர்ந்து இருக்கிறது.

Categories

Tech |