உக்ரைன் அதிபருக்கு இங்கிலாந்தின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கௌரவப்படுத்தினார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போரில் இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக இருந்து வருகின்றது. உக்ரைனுக்கு ராணுவ படைகள், நிதி மற்றும் மனிதாபிமான உதவிகளை இங்கிலாந்து வழங்கி வருகின்றது. இந்த போருக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் மாதம் உக்ரைனுக்கு சென்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்துள்ளார். இங்கிலாந்து எப்போதும் உக்ரைனுக்கு துணை நிற்கும் என்று உறுதியளித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் உயரிய விருதான சர் வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கி போரிஸ் ஜான்சன் கவுர படுத்தியுள்ளார்.
இது குறித்து போரிஸ் ஜான்சன் டுவிட்டரில் கூறியதாவது, ” இன்று வின்ஸ்டன் சர்ச்சில் தலைமைத்துவ விருதை எனது நண்பர் ஜெலன்ஸ்கிக்கு வழங்கியது பெருமையாக உள்ளது. ஜெலன்ஸ்கியின் தைரியம் எதிர்ப்பாற்றல் மற்றும் கண்ணியம் என அவரின் அனைத்து குணங்களும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை அசைத்து உலகளாவிய ஒற்றுமை அலைகளை கிளறிவிட்டன” என அவர் தெரிவித்துள்ளார்.