அசாம் மாநிலத்தை சேர்ந்த அரோமேட்டிக் டீ என்ற நிறுவனம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பெயரில் டீத்தூளை அறிமுகம் செய்துள்ளது. உக்ரைன் அதிபரின் துணிச்சலையும், வீரத்தையும் கௌரவிக்கும் விதமாக இந்த டீத்தூள் அறிமுகம் செய்கிறோம். வெற்றி என்பது அருகில் இல்லை என்பது தெரிந்தும் அவர் இன்னும் போராடுகிறார். இந்த டீத்தூள் ஆன்லைனில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
Categories