Categories
உலக செய்திகள்

உக்ரைன் : அப்பாவி மக்கள் நலன் கருதி ….!! மனிதாபிமான பாதைகள் திறந்து விடப்பட்டுள்ளன….!!! ரஷ்யா பேச்சு…!!

நடைபெற்றுவரும் உக்ரைன் ரஷ்யா போரால் மரியுபோல் நகரம் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது . அங்குள்ள உக்ரைன் நாட்டு வீரர்களுக்கு ரஷ்ய துருப்புகள் ஒரு இறுதி எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி உக்ரைன் வீரர்கள் போரை கைவிடுவதற்கு காலக்கெடு அளிக்கப்பட்டிருந்தது. அந்த கெடு முடிவடைந்து விட்ட நிலையில் போர் பயங்கரமாக வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முற்றுகையிடப்பட்ட நகரமான மரியுபோலில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் தப்பிச் செல்வதற்கு பாதை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கான இந்த பாதுகாப்பான வழித்தடத்தை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இதனை உக்ரைன் துணை அதிபர் இரினா வெரேஷ்சுக் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |