உக்ரைன் நாட்டின் ஐரோப்பிய ஒன்றிய தலைவர், அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில்சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போருக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன் நேற்று திடீரென்று உக்ரைன் தலைநகர் கீவுக்கு பயணம் மேற்கொண்டார்.
அங்கு அவர் அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார். உக்ரைனின் புனரமைப்புக்கு தேவையான கூட்டுப் பணிகள் தொடர்பாகவும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஜெலன்ஸ்கியுடன் விவாதித்ததாக உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்தார்.