கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. ரஷ்யா கீவ் நகரை தீவிரமாக கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் உக்ரைன் ராணுவம் அதை முறியடித்ததால் ரஷ்ய படைகள் கீவ் நகரில் இருந்து பின் வாங்கியது. இந்நிலையில் தற்போது ரஷ்ய படைகள் தங்களின் முழு கவனத்தையும் கீவ் நகர் மீது திருப்பி உள்ளது. கடந்த சில தினங்களாக கீவ் நகர் மீது ஏவுகணை மற்றும் வெடிகுண்டு ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கீவ் நகரில் ரஷ்ய படைகள் நேற்று முன்தினம் ட்ரோன்கள் மூலம் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் ஈரானிடம் இருந்து பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் ரஷ்யா கீவ் நகரை நோக்கி ஏராளமான ஏவுகணைகளை அனுப்பியதாகவும் அவற்றில் பெரும்பாலானவை இடைமறித்து அளிக்கப்பட்டதாகவும் உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதல் சம்பவத்தால் கீவ் நகரில் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த ட்ரோன் தாக்குதலால் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.