உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போர் காரணமாக உலகின் மிகப் பெரிய தானிய ஏற்றுமதியாளரான உக்ரைனிலிருந்து வெளிநாடுகளுக்கு தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படுவது தடைப்பட்டது. இதன் காரணமாக உலகளவில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் எழுந்ததால் ஐ.நா. இவற்றில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டது. அந்த வகையில் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின் கருங்கடல் வழியே தானிய ஏற்றுமதியை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்யா கையெழுத்திட்டது.
இதையடுத்து போர் துவங்கிய 5 மாதங்களுக்கு பின் சென்ற 2ஆம் தேதி உக்ரைன் நாட்டின் ஒடசோ துறைமுகத்திலிருந்து 26,000டன் சோளத்துடன் சரக்கு கப்பல் லெபனானுக்கு புறப்பட்டு சென்றது. இந்நிலையில் நேற்று உக்ரைனின்துறைமுகங்களில் இருந்து 3 சரக்குகப்பல்களானது தானியங்கள் உடன் புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இக்கப்பல்களில் மொத்தம் 58 ஆயிரம் சோளம் ஏற்றிச்செல்லப்படுகிறது. இந்த கப்பல்கள் துருக்கி சென்று அங்கு சோதனையை முடித்தப் பின் செல்லவேண்டிய அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.