உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்ரோஷமான போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர்கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உட்பட பல நகங்களில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறு ரஷ்யபடைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைனின் கோஷ்டொமெல் நகரமேயர் யூரிக் ப்ரேலெம்கோவை ரஷ்யபடைகள் கொன்று உடலை மண்ணுக்குள் புதைத்து உள்ளனர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. அதாவது யூரிக்கின் உடல் அப்பகுதியிலுள்ள ஒரு கிருஸ்தவ மத வழிபாட்டுத்தளம் அருகே அமைந்துள்ள நிலப்பரப்பில் புதைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த உடலை உக்ரைன் அதிகாரிகள் நேற்று தோண்டி எடுத்து இருக்கின்றனர்.