Categories
உலக செய்திகள்

உக்ரைன்: நிர்வாணமாக 5 பெண்களை ரோட்டில் எரிக்க முயற்சி…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள ஆக்ரோஷமான போர் 39வது நாளாக நீடிக்கிறது. இதில் உக்ரைன் தலைநகர் கீவ் அருகில் உள்ள சில முக்கியமான நகரங்களிலிருந்து ரஷ்யப்படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து கீவ் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் முழுமையாக கைப்பற்றியுள்ளோம் என துணை பாதுகாப்பு மந்திரி கன்னா மாலியர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் அவர் கூறியபோது, ரஷ்யப்படைகள் கீவ் அருகில் சாலையொரத்தில் 4 அல்லது 5 நிர்வாண பெண்களின் உடல்களை எரிக்க முயற்சி செய்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் கீவ்விற்கு அருகே மக்கள் அதிகம் வசிக்கும் முக்கியமான நகரமான புச்சாவில் ரஷ்ய படையினரால் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் சுட்டு கொல்லப்பட்டு நகரத்தின் தெருக்கள் எங்கும் சிதறி கிடந்தனர். ரஷ்யாவிடம் இருந்து நகரத்தை மீண்டும் கைப்பற்றிய பிறகு புச்சாவில் 280 நபர்களை வெகுஜன புதைகுழிகளில் உக்ரைன் வீரர்கள் புதைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |