வெளிநாட்டைச் சேர்ந்த காதல் ஜோடிகள் இந்தியாவில் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
உக்ரைன் நாட்டில் அலோனா என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 வருடங்களாக இத்தாலியைச் சேர்ந்த செர்கேய் நிகோவ் சென்ற வாலிபரை காதலித்து வருகிறார். இந்த வாலிபர் ரஷ்யாவில் பிறந்து இத்தாலியில் குடி பெயர்ந்தவர். கடந்த வருடம் அலோனா மற்றும் செர்கேய் இந்தியாவை சுற்றிப் பார்ப்பதற்காக வந்துள்ளனர். இந்த காதல் ஜோடி இந்தியாவில் உள்ள பல இடங்களை சுற்றி பார்த்ததில் இந்திய கலாச்சாரம் அவர்களுக்கு பிடித்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டிற்கு இடையே போர் நடந்து வருவதால், அலோனா மற்றும் செர்கேய் இந்தியாவிலேயே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர். இவர்களுடைய திருமணம் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள தர்மசாலா மேஜிஸ்திரேட் அலுவலகத்தில் சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செர்கேய், ரஷ்யா மற்றும் உக்ரைன் அரசுகளுக்கு இடையே தான் போர் நடைபெற்று வருகிறது என்றும், இரு நாட்டு மக்களுக்கும் இடையே போர் நடைபெறவில்லை எனவும் கூறியுள்ளார்.