உக்ரைன் தலைநகர் கீவைச் சுற்றியுள்ள நகரங்களிலிருந்து ரஷ்ய துருப்புக்கள் பின்வாங்கிய பின், அப்பகுதிகளில் 410 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 300 பேர் புச்சா நகரத்தில் மட்டும் கொலை செய்யாப்பட்டுள்ளதாகவும் உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அந்த நகரில் நேற்று 57உடல்கள் உடைய பாரிய புதைகுழி கண்டெடுக்கப்பட்டது. அங்கு உயிரிழந்தவர்களில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களும், துன்புறுத்தி கொலை செய்யப்பட்ட குழந்தைகளும் அடங்குவர் என உக்ரைன் தெரிவித்தது. ரஷ்யபடை வீரர்களின் இந்த கொடூர செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ரஷ்யா மீது கூடுதலாக தடைகள் விதிக்க முன்வந்துள்ளனர். அந்த அடிப்படையில் உக்ரைனில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள ஜெர்மனி, ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 40 ரஷ்யதூதர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியது. அதனை தொடர்ந்து ஐரோப்பிய கூட்டு நாடுகளுடன் ஒன்றிணைந்து ரஷ்யாவுக்கு எதிராக கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருவதாக ஜெர்மனி எச்சரித்து உள்ளது. சென்ற 14 வருடங்களாக உக்ரைனியர்களின் மரணத்திற்கு மறைமுகமாக துணைபோய் இருந்ததற்காக ஜெர்மனி மற்றும் பிரான்ஸை உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையாக சாடிய பின் இந்த நடவடிக்கையை ஜெர்மனி எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.