Categories
உலக செய்திகள்

உக்ரைன் போருக்கு மத்தியில்… “என் பூனைகளை காப்பாற்றுங்கள்”..? இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடிய நபர்…!!!!!

இந்தியாவில் பிறந்த மருத்துவரான கிடிகுமார் பாட்டீல் என்பவர் கடந்த 2016ம் வருடம் உக்ரைன் குடியுரிமை பெற்றுள்ளார். ரஷ்யா உக்ரைன் போரில் அவர் பணிபுரிந்த மருத்துவமனை குண்டு வீசி தாக்கப்பட்டதை தொடர்ந்து தனது செல்லப் பிராணிகளை விட்டு அண்டை நாடான போலந்துக்கு சென்று வாழ வேண்டி இருந்தது. பாட்டீல் 2020 ஆம் வருடம் தலைநகர் கீவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் இருந்து இரண்டு விலங்குகளை வாங்கியுள்ளார் அவற்றில் ஒன்று 24 மாதம் ஆண் லெப்ஜாக் அதாவது ஆண் சிறுத்தை மற்றும் பெண் ஜாகுவார் போன்றவற்றின் அரிய கலப்பின மிருகத்தையும் மற்றொன்று 14 மாத பெண் கருப்பு பாந்தர் ஆகும். இந்த நிலையில் போரின் போது அவர் பணிபுரிந்த மருத்துவமனை மூடப்பட்டதால் தனது செல்லப் பிராணிகளுக்கு உணவளிப்பது மிகவும் சிரமமானது.

மேலும் அவர் உணவுக்காக 300 டாலர் செலவழித்து வந்தார் அதில் போர் தொடங்கிய பின் தினமும் 5 கிலோ கோழி இறைச்சி இருந்தது. கடைசியில் அவர் தனது சேமிப்புகள் அனைத்தையும் செலவழித்து விட்டு தனது விவசாய நிலத்தில் ஒரு பகுதியை இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் இரண்டு கார்கள் அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் கேமரா போன்றவற்றை $100,000க்கு விற்றுள்ளார். இந்த நிலையில் அவர் பூனைகளை ஒரு பராமரிப்பாளரிடம் விட்டுவிட்டு அவருக்கு மூன்று மாத ஊதியமாக$2,400 கொடுத்துள்ளார். மேலும் ஒரு நாள் கொஞ்சம் பணம் சம்பாதித்து திரும்புவார் என்ற நம்பிக்கையில் எல்லையை கடக்க முடிவு செய்துள்ளார்.

ஆனால் எல்லையை கடக்க முயற்சி செய்தபோது உளவாளி என்று சந்தேகத்தின் பேரில் ரசிவீரர்களால் தடுத்து வைக்கப்பட்டு மூன்று நாட்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த நிலையில் அவர் போரில் பங்கேற்கவில்லை என அவர்களை நம்ப வைத்த பின் தான் அவர் தனது விலங்குகளை வைத்து எடுத்த யூடியூப் வீடியோக்களை காட்டியுள்ளார். ஆனால் அவரது கடவுச்சீட்டை கைப்பற்றி காகித அடையாளத்தை வழங்கி அவரை போலந்து எல்லைக்கு அருகே இறக்கிவிட்டுள்ளனர். பாட்டீல் தனது சோதனையை போலந்து அதிகாரிகளுடன் தெரிவித்த பின் அவர்கள் அவருக்கு பேப்பர் விசா அளித்துள்ளனர். மேலும் இது அவரை 90 நாட்கள் நாட்டில் தங்க அனுமதிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உக்ரைனில் நிலைமை மோசம் அடைந்து வருவதால் பாட்டீல் எப்போது தனது செல்ல பிராணிகளை பார்க்க உக்ரைன் திரும்புவார் என தெரியவில்லை. மேலும் இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர் அவருக்கு பணம் அனுப்பினாலும் அவர் தனது பூனைகளை மீட்டெடுக்க இந்திய தூதரகங்களின் உதவியை நாடியுள்ளார். எனது பூனைகளை உக்ரைனில் இருந்து வெளியே கொண்டு செல்ல முடியுமா என நான் கயேவில் உள்ள இந்திய தூதரகத்தை தொலைபேசியிலும் வாட்ஸ் அப்பிலும் சில முறை தொடர்பு கொண்டேன் ஆனால் அவர்கள் காட்டு விலங்குகளை கையாள்வதில்லை என என்னிடம் கூறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் எனக்கு என் பூனைகள் திரும்ப வேண்டும் இந்திய அரசாங்கம் அவர்களை அழைத்து வந்து இந்தியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் உள்ள காட்டில் கொண்டு விட்டாலே போதும் நான் அவற்றை காப்பாற்ற விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |