Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்….! “அதிபருடன் பிரதமர் மோடி பேச்சி”…. வெளியான தகவல்….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 21 ஆம் நூற்றாண்டில் இதுவரை கண்டிராத உக்கிரப் போராக மாறி வருகிறது. இதனை தொடர்ந்து ராணுவ கட்டமைப்புகளை தகர்க்க தான் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்ட ரஷ்யா தற்போது குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் மற்றும் முக்கிய நகரங்களை சின்னா பின்னமாக்கி சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் வழக்கு எதிர்கொள்ளும் நிலையை தேடிக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்த போரில் 15 இலட்சம் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி போலந்து, ருமேனியா, சுலோவாகியா, ஹங்கேரி, மால்டோவா இன்னபிற ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில் பிரதமர் மோடி இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் தொலைபேசியில் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தையில் போர் விவகாரம், இந்தியர்கள் வெளியேற்றுவது போன்ற விஷயங்களை பற்றி பேச உள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து ரஷ்ய படைகள் 12வது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேசுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |