உக்ரைனில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் அண்டை நாடுகளில் ஒன்றான போலந்தில் அதிகளவு அகதிகள் தஞ்சமடைந்து வருகின்றன.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி இன்றுடன் 32 நாளை எட்டியுள்ளது. ரஷ்யா ராணுவப் படைகளின் தாக்குதலால் உக்ரேன் நாட்டில் இருந்து பொதுமக்கள் போலந்து நாட்டிற்கு அகதிகளாக வந்து கொண்டு இருக்கின்றனர் என்று போலாந்து அரசு தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியத்தில் இருந்து 22 லட்சத்திற்கும் மேலான பொதுமக்கள் போலந்து நாட்டிற்கு வந்ததாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலந்து நாட்டில் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் எரிவாயு, பெட்ரோலியம் போன்ற பொருட்களின் விலை கடந்த மாதத்தை விட 30 சதவிகிதம் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.