உக்ரைன்- ரஷ்யா போரின் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 110 டாலராக அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படைகளின் தாக்குதலானது நேற்றுடன் 7-வது நாளாக நீடித்துள்ளது. இந்நிலையில் இப்போரின் தாக்கம் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இப்போரின் தொடக்கத்திலேயே சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.
இதனை அடுத்து கச்சா எண்ணெயின் விலை, போருக்கு முன்பு வரை 94 டாலராக இருந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 100 டாலரை கடந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இந்த விலை உயர்வு மேலும் அதிகரித்து 110 டாலரை எட்டியுள்ளது. இதனால் உலக அளவில் பெருத்த பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.