உக்ரைனுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் தலையிட வேண்டும் என்று ரஷ்ய செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போரில் அமெரிக்காவும் நோட்டாவும் செயல்பட வேண்டும் என்று ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உக்ரைனுக்கு அமெரிக்காவும், நோட்டாவும் ஒன்றும் செய்யாது என்று தெரியும். இதனால் புதினுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பச்சை விளக்காக அமைகிறது. மேலும் உக்ரைன் மக்களை அழிப்பதற்காக சிரியாவும், பெலாரசும் வரவளைக்கப் பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து உக்ரைனை பாதுகாக்க நோட்டா அமைப்பு கடமைபட்டிருக்கவில்லை என்று சொல்வதை நிறுத்துங்கள். இந்த கடமை தார்மீகமானது. உக்ரைனை நீங்கள் காப்பாற்றினாலும், இல்லாவிட்டாலும் புதின் தீவிரம் அடைவார். இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான இந்தப் போரில் ரஷ்ய அதிபர் புதினின் அடுத்த நடவடிக்கைகள் குறித்து யோசிப்பதில் யாரும் தங்களை மட்டுப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்