Categories
உலகசெய்திகள்

உக்ரைன் போர்… விரைவில் பேச்சுவார்த்தை… வெளியுறவு மந்திரி தகவல்…!!!!!

உக்ரைன் போர் சம்மந்தமாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்துள்ளார்.

உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்னுடனும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனும் பேச  துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி துருக்கியின் வெளியுறவு மந்திரி மெவ்லூட் கவுசோக்லு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியபோது, வரும் நாட்களில் ரஷ்ய உக்ரைன் தலைவர்களுடன் எங்கள் அதிபர் பேச்சுவார்த்தையை தொடர்கிறார்.

இதனையொட்டி நாங்கள் ரஷ்ய, உக்ரைன் சகாக்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வோம்.  ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் நான் உக்ரைனிய  தூது குழுவுடன் பேசினேன். ரஷிய தரப்புடனும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம் என கூறியுள்ளார். மேலும் “விரைவில் புதினும், ஜெலன்ஸ்கியும் சந்தித்து பேசக்கூடும். இது ரஷிய தலைவரின் நிலைப்பாட்டை பொறுத்து அமையும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |