உக்ரைன் மக்கள் அமீரகத்துக்கு விசா இல்லாமல் வரலாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் நேரடியாக அமீரகத்திற்கு வரலாம் என்று வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தூதரக ஆலோசனை பிரிவின் உதவி செயலாளர் பைசல் லுட்பி கூறியதாவது. “உக்ரேன் மக்கள் வருகை குறித்து புதன்கிழமை இரவு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமீரக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமீரகதிற்கு வரும் மக்களுக்கு விசா தேவையில்லை என்றும் விமான நிலையத்திற்கு பாஸ்போர்ட்டுடன் வருகை புரிந்து அங்கு விசாவை பெற்றுக் கொள்ளலாம் என்று அமீரகத்தின் உள்ள உக்ரைன் நாட்டு தூதரகத்தின் ஒத்துழைப்பில் இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உதவிகள் மற்றும் சேவைகளை உக்ரைன் மக்களுக்கு வழங்கவும் அமீரகம் தயாராக உள்ளது.
இதற்கிடையில் முன்னதாகவே அமீரகம் சார்பில் 50 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிவாரண உதவிகள் உக்ரைன் நாட்டுக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும் உக்ரைனுக்கான பிரதேச அகதிகள் மறுவாழ்வு திட்டத்திற்காகவும், ஐ.நாவில் மனிதாபிமான உடனடி நடவடிக்கைகளை அடிப்படையிலும் இந்த பங்களிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள மனிதாபிமான நிலை குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பாகுபாடு மற்றும் தடைகள் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற பாதுகாப்பகம் அனுமதிக்க வேண்டும் என்பதே அமீரகம் அறிவுறுத்தி வருகிறது” என்று கூறியுள்ளார்.