Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள் குறித்து போப் ஆண்டவர் பேச்சு… திடீரென கண்ணீர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!

போப்பாண்டவர் உக்ரைன் குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக லட்சக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். சர்வதேச நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இரு தரப்பினரையும்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருடாந்திர கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றுள்ளார். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன்  மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து உக்ரைன் மக்களின் துயரங்கள் குறித்து போப் ஆண்டவர் பேசும்போது, திடீரென கண்ணீர் விட்டு அழுதார். “அப்போது உக்ரைன் மக்களின்  அமைதிக்காக நாங்கள் நீண்ட காலமாக இறைவனிடம் கேட்கின்றோம். அந்த நாட்டின் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் துன்பப்படுகிறவர்களின் வேண்டுகோளை நான் உங்களுக்கு முன் வைக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே போப்பாண்டவர் உக்ரைன் குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |