Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள்!… அந்த பேரரசின் கீழ் இருக்க விருப்பப்படல்ல…. அதிரடி அறிவிப்பு…..!!!!!

உக்ரைனியர்கள் ரஷ்ய பேரரசின் கீழ் இருப்பதற்கு விருப்பப்படவில்லை என உக்ரைனிய பிரதமரான டெனிஸ்ஷ்மிஹால் தெரிவித்து இருக்கிறார். உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தாக்குதல் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் செயலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து கண்டனங்களை தன் பேட்டிகளின் வாயிலாக தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் நாட்டின் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் பிளிங்கென்னுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, “உக்ரைன் மக்கள் ரஷ்யாவின் பேரரசின் கீழ் இருக்க விரும்பவில்லை. இதில் உக்ரைனிய மக்கள் நாகரீக உலகம் என்றழைக்கப்படும் ஐரோப்பாவின் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறார்கள். ரஷ்யாஉடனான போரில் உக்ரைனுக்கு பலத்த ஆதரவு அளிக்கும் அமெரிக்காவுக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |