ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது 10வது நாளாக முழு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தவில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெர்மன் அதிபர் ஒலாப் ஷோல்ஸை ரஷ்ய அதிபர் புதின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது ‘உக்ரைன் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தவில்லை. மேலும் பள்ளிகள், மருத்துவமனைகள், குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதாக வெளிவந்த தகவல் அனைத்தும் போலியானது என்று ஜெர்மன் அதிபரிடம்’ கூறியுள்ளார்.
இதற்கிடையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதின் அப்பாவி மக்களை உக்ரைன் பாதுகாப்பு படையினர் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாகவும், தாக்குதலை தொடர்ந்து நடத்தி உள்ளதாகவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.