உக்ரைன் மீது நடந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட 2 வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 150 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரின் போது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் நாசமானது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டொனெஸ்ட்க் நகரில் எரியும் தீ பந்துகள் போன்ற குண்டுகள் வீசப்பட்டுள்ளது.
There are a number of videos showing what looks like incendiary munitions used on Donetsk tonight. https://t.co/uIOorlZ0ydhttps://t.co/8zAfGo7pI1 pic.twitter.com/Pz8JFgxqwm
— Rob Lee (@RALee85) July 23, 2022
இதுபோன்ற குண்டுகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய 2 நாடுகளும் வைத்திருப்பதால், தாக்குதலுக்கு யார் காரணம் என்பது சரிவர தெரியவில்லை. இது தொடர்பான 2 வீடியோக்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.