Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல்…. நடத்தும் திட்டம் எங்களுக்கு இல்லை…. தகவல் தெரிவித்த பிரபல நாட்டு அதிபர்….!!!!

உக்ரைன் மீது மிகப்பெரியளவில் தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 234 நாட்களாக நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் ஆகிய 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டது. இதற்கிடையே,  போரில் தற்போது உக்ரைன் இராணுவ படைகளின் ஆதிக்கம் சற்று அதிகரித்து வருகின்றது.

ரஷ்ய இராணுவ படைகள் கைப்பற்றிய பகுதிகளை உக்ரைன் மீட்டு வருகின்றது. இதனால், இரு தரப்புக்குமிடையே மோதல் அதிகரித்து உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் போரின் போக்கு 3-ஆம் உலகப்போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாகி வருகின்றது. இது குறிப்பாக, கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கஜகஸ்தான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து ரஷ்யா – மத்திய ஆசிய நாடுகள் இடையே நடைபெறும் மாநாட்டில் புதின் பங்கேற்கின்றார். இந்த மாநாட்டில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்களும் பங்கேற்கின்றனர். மேலும் கஜகஸ்தான் பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து அவர் பேசியதாவது, “உக்ரைன் மீதான போருக்காக நான் வருத்தப்படவில்லை. ரஷ்யா சரியான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. உக்ரைனை முழுமையாக அழிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போதைக்கு எங்களிடம் இல்லை” என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |