உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா தனது நாட்டு வாலிபர்களையும் ராணுவ படையில் சேர்த்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த 8 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பெரும்பாலான உக்ரைன் பகுதிகளை ரஷியா கைப்பற்றியது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளை நோக்கி அகதிகளாக படையெடுத்தனர். ஆனாலும் இரு தரப்பிலும் மிகப்பெரிய அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைனுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் ராணுவ உதவிகளையும் செய்து வருகிறது. மேலும் ரஷியாவிடம் இருந்து பல பகுதிகளையும்உக்ரைன் மீட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனுக்கு எதிரான போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதேபோல் போருக்கு செல்வதற்கு முன்பாக ரஷிய ராணுவத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரு தேவாலயத்தில் தங்களது காதல் ஜோடியை கரம் பிடித்தனர். இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.