உக்ரைன்- ரஷ்யா நாடுகளுக்கு இடையே இன்னும் போர் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட இத்தாலி, அந்த நாட்டிற்காக அமைதி திட்டம் என்ற ஒன்றை முன் மொழிந்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் பற்றி ரஷ்யாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா
தெரிவித்துள்ளதாவது, இத்திட்டம் வெறும் கற்பனையாகவே போய்விடும் என்று விமர்சனம் செய்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரம், உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக அமைதி திட்டம் பற்றிய விரிவான வரையறைகளை குறித்து, இத்தாலியின் வெளியுறவு மந்திரி லூய்கி டி மாயோ விளக்கினார். மேலும், இது தொடர்பாக நியூயோர்க்கிற்கு பயணம் செய்திருந்த ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் உடன் இவர் கலந்துரையாடியுள்ளார். அப்போது தான், இத்திட்டம் ஒரு கற்பனை மட்டுமே என ரஷியா விமர்சித்துள்ளது.
மேலும் இத்தாலியின் இந்த திட்டம் குறித்த முன்முயற்சியை இன்னும் நாங்கள் பார்க்கவில்லை என ரஷியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ராஜாங்க வழிகள் மூலம் அதனைப் பெறுவோம் என நம்புகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக, ரஷிய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறியுள்ளதாவது, “நீங்கள்(இத்தாலி) ஒரு கையால் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி கொண்டு, மறுபுறம் நிலைமையை அமைதியான முறையில் தீர்க்கும் திட்டங்களைக் கொண்டு வர முடியாது. ஆகவே எந்தவொரு மேற்கத்திய திட்டத்தையும் ரஷியா கைப்பற்றும் எனவும் அதை பின்பற்றும் என்று அவர்கள் நம்பினால், அவர்கள் எங்களை பற்றி அதிகம் புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.