இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
உஸ்பெகிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதனையடுத்த பிரதமர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இன்றைய காலமானது போர் நடத்துவதற்கான காலம் இல்லை. இது குறித்து நான் உங்களிடம் தொலைபேசியின் மூலம் பலமுறை பேசியுள்ளேன் என கூறியுள்ளார். இதற்கு ரஷிய அதிபர் புதின் உங்கள் கவலைகள் பற்றி எனக்கு தெரியும், இந்த போர் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும் என கூறியுள்ளார். இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை தரப்பில் மாளிகையில் உள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சிலிங் தகவல் தொடர்புக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி செய்தியாளர்கள் சந்தித்து பேசியுள்ளார்.
அதில் உக்ரைன் நாட்டின் மீது ரஷிய அதிபர் புதின் அனுதாபம் காட்ட வில்லை. முதலில் அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கே தெரியவில்லை. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகிய இரண்டு பேரும் பேசியது உண்மையானது. ஆனால் தற்போது புதினை எதிர்த்து குரல் கொடுக்காத மற்றும் கடுமையாக இல்லாத நாடுகள் கூட இன்று கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளது. மேலும் புதின் சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்தி கொள்கிறார். இது முற்றிலும் மோசமானது மற்றும் கொடூரமானது என அவர் கூறியுள்ளார்.