Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷிய போர்…. பேச்சுவார்த்தைக்கு அழைத்த புதின்…. மறுக்கும் உக்ரைன்…. ஏன் தெரியுமா….?

உக்ரைனும் அதன் ஆதரவு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியா 11 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் ரஷியா உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது. இதனால் உக்ரைனுக்கு  ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என  பல நாடுகள் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் உக்ரைனுக்கு  ஆயுத உதவியை வழங்கி வரும் அமெரிக்கா சமீபத்தில் அதிநவீன பேட்ரியாட் வான் பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்குவதாக அறிவித்தது. இந்நிலையில் இன்று ரஷிய அதிபர் புதின் பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனும்,அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தையை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |