Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா விவகாரம்…. இந்தியா நடுங்குகிறது – ஜோ பைடன்

உக்ரைன்-ரஷ்யா போரின் காரணமாக உக்ரைன்  மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக  பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு பொருளாதார தடைகளை விதித்தும் வருகின்றன. ஆனால், போரை ரஷ்யா நிறுத்தவில்லை. இதனிடையே  ரஷ்யாவுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ இந்தியா எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் ஐ.நா பொதுசபையில் நடந்த வாக்கெடுப்பில் நடுநிலை  வகித்தும்இருந்ததாகவும் இதனால்  அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் மீது வருத்தம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், அமெரிக்க வணிகத் தலைவர்கள் கூட்டத்தில் பேசிய அதிபர் ஜோ பிடன், ‘ரஷ்யாவுக்கு எதிராக  ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் நேட்டோ ஒற்றுமையாக செயல்படுவதை பாராட்டுகிறேன். ‘குவாட்’ உறுப்பினர்களில் ஒருவரான இந்தியா,  ரஷ்யாவுடன் எண்ணெய் வாங்க முடிவு செய்துள்ளது. இந்தியா, உக்ரைன் – ரஷ்ய போர் விவகாரத்தில் விதிவிலக்காக நிற்கிறது . உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஆனால் இந்தியா இந்த விஷயத்தில் நடுங்குகிறது’என கூறியுள்ளார்.

Categories

Tech |