Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர்…. பிரபல நாட்டு அதிபரிடம் பேசினேனா…. எலான் மஸ்க் கேள்வி….?

பேச்சுவார்த்தைக்கு தயாராகுவதாக ரஷ்ய அதிபர் புதின் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்கிடம் கூறியதாக தகவல் வெளியாாக்கியுள்ளது. 

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 231 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையல் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைன் நாட்டு பிராந்தியங்களான லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் போன்ற 4 நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டுள்ளது.

இதற்கிடையே போர் நடந்து வரும் உக்ரைனில் அமைதி நிலவ வேண்டுமானால் டான்பாஸ் மற்றும் கிரீமியாவில் வாழும் மக்கள் தாங்கள் ரஷ்யாவில் இணைய வேண்டுமா அல்லது உக்ரைனில் இணைய வேண்டுமா என முடிவெடுக்க வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஆம், இல்லை என்ற இரு பதில்களுடன் எலான் மஸ்க் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். இதில், டான்பாஸ்க் மற்றும் கிரீமியா மாகாண மக்கள் தான் இந்த விவகாரத்தை முடிவு செய்ய வேண்டும் என்பதற்கு   59 % வாக்குகள் ஆம் என்றும் 41 ℅ வாக்குகள் இல்லை என்றும் பதிவாகின.

மேலும் உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து எலான் மஸ்க் தெரிவித்த இந்த ஆலோசனைக்கு உக்ரைன் நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் கிரீமியா தொடர்ந்து அந்நாட்டின் கட்டுப்பாட்டிலும், லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் போன்றவை ரஷ்யாவின் அங்கமாகவும் உக்ரைன் அங்கிகரித்தால் செயல்படுவோம். இல்லையெனில் யாருடனும்  சேராமல் நடுநிலையாக இருப்போம் என உக்ரைன் உறுதியளித்தால் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று அதிபர் புதின் தன்னிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து எலான்  மஸ்க்  தன்னிடம் கூறியதாக  அரசியல் ஆபத்து சூழ்நிலை ஆலோசனை நிறுவனமான யுரோஎசியன் குரூப் தலைவர் பிரிம்மர் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் கூறியதாவது, “கிரீமியா மீது உக்ரைன் படையெடுத்தால் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என புதின் தெரிவித்துள்ளதாக எலான் மஸ்க் தன்னிடம் தெரிவித்துள்ளார்” என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து  பல்வேறு  தகவல்களும் வெளியாகியுள்ளன. மேலும் இதுகுறித்து எலான் மஸ்க் கூறியதாவது, “உக்ரைன் போர் குறித்து புதினிடம் தான் பேசவில்லை என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான செய்தியை மேற்கொள் காட்டி டுவிட்டர் பயனாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு எலான் மஸ்க் பதிலளித்துள்ளார். மஸ்க் அளித்த பதிவில், இது தவறன செய்தி. உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை குறித்து நான் பேசவில்லை. நான் புதினிடம் 18 மாதங்களுக்கு முன் ஒரே ஒருமுறை பேசினேன். அதுவும், விண்வெளி தொடர்பாக தான்” என்று அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |