உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. தற்போது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் புடின் உடன் இந்திய பிரதமர் மோடி பேச வேண்டும் என்று இந்தியாவில் உள்ள உக்ரைன் தூதரகம் வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலை தொடர்பாக உக்ரைன் அதிபருடன் இந்தியப் பிரதமர் மோடி பேசி அறிந்துக் கொள்ளவும் தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது..