Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா பேச்சுவார்த்தை…. என்ன ஆச்சி….!! வெளியான தகவல்….!!!

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்ற 3-வது கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 12வது நாள் ஆகி விட்ட நிலையில் ரஷ்யா உக்ரேனின் பல்வேறு நகரங்களை உருக்குலைய வைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து உக்ரைனின் முக்கிய நகரங்களை வான்வழி, ஏவுகணை வீச்சு, பீரங்கி போன்ற தாக்குதல்களை கடந்த 10 நாட்களாக நடத்தி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனும் ரஷ்யாவுக்கு ஈடுகொடுத்து போராடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த போரில் உயிர் இழப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டு கட்ட பேச்சுவார்த்தை  தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் தூதுக் குழுவை சேர்ந்த டேவிட் அராகாமியா ஏற்கனவே 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று இரு நாடுகளுக்கும் இடையே 3-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக உக்ரைன் நிர்வாகத்தின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் கூறுகையில்,  “இருநாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் தளவாடங்களை மாற்ற முடிவு செய்துள்ளனர். ஆனாலும் நிலைமையை கணிசமாக மேம்படுத்தபடும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

Categories

Tech |