கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
15 உறுப்பினர்கள் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று ஆற்றிய உரை. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் சர்வதேச விலைவாசி உயர்வு, உணவு தானியம், உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. உலக பொருளாதாரமே பெரும் நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் வருங்காலத்தில் இது இன்னும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதிலும் அணு ஆயுத தாக்குதல் அச்சம் அதிகரித்துள்ளது. ஆகையால் உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜியா ரீதியிலான பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். இதை தான் ஷாங்காய் மாநாட்டிலும் பிரதமர் மோடி “இது போருக்கான நேரம் அல்ல” என்று கூறியுள்ளார். இந்த போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளையும் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளுக்கு பொருளாதார உதவிகளையும் இந்தியா செய்து வருகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை உலகத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படும் போது அவர்களை பாதுகாக்கும் வகையிலான அரசியல் செய்யக்கூடாது. அமைதியையும், நீதியையும் நிலை நாட்டவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. வெளி வெட்ட வெளிச்சத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு தண்டிக்காமல் இருப்பது சரியாகாது.
இது குறித்து உறுதியான தகவலை பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவிக்க வேண்டும் என்றார் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்களையும் நபர்களையும் கருப்பு பட்டியலில் வைக்கக் கோரி அமெரிக்கா இந்தியா கொண்டு வந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் கொண்ட சீனா தடையிட்டு நிறுத்தியது. இதைக் குறிப்பிடும் வகையில் அமைச்சர் ஜெய்சங்கர் இவ்வாறு பேசியுள்ளார்.
உக்ரைன் ரஷ்ய போர் நிற்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று ஐநா தலைவர் அன்டோனியா குட்டேரெஸ் தெரிவித்தார். இதுகுறித்து பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவர் கூறியதாவது, “கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் போர் உக்ரைனிலும் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சத்தையும் ரத்த கலரியையும் நிறுத்திவிட்டு அமைதியை நிலை நாட்டுவதற்கு அந்த நாடுகள் முற்படுவதில்லைை. அணு ஆயுத தாக்குதல் பற்றி பேசுவதற்கே அச்சப்பட்ட நிலை மாறி தற்போது பேசும் பொருளாகிவிட்டது. அனைத்து நாடுகளும் அணு ஆயுதங்களை அளிக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.