உக்ரைன் போர் பற்றி செய்தி வாசித்த போது செய்தி வாசிப்பாளர் தடுமாறி அழுத காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 59 நாளாக போர் தொடுத்து வருகின்றது. இந்த நிலையில் உக்ரைனில் உள்ள புச்சா பகுதியின் மீது தாக்குதல் நடத்திய வீரர்களை பாராட்டி ரஷ்ய அதிபர் புதின் கவரப்படுத்தினார். இதுதொடர்பான செய்தி ஜப்பானை சேர்ந்த ஒரு செய்தி நிறுவனத்தில் ஒளிபரப்பாகியுள்ளது. அப்போது அந்த செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர் யூமிகோ மட்சுவோ, நேரலையிலே தடுமாறி அழுதுள்ளார்.
பின்னர் நிதானம் அடைந்த அவர் சிறிது நேரத்திற்குப்பின் வாசிப்பை தொடர்ந்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த பலர் அந்த செய்தி வாசிப்பாளர் போலவே தாங்களும் அழுததாக கருத்து தெரிவித்திருக்கின்றனர். மக்களின் மனதில் இந்த போர் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதற்கான சிறந்த உதாரணம் என்று இது சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.