Categories
உலகசெய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உக்ரைனுக்கு இதைக் கொண்டு செல்ல முடியவில்லை… உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவிப்பு…!!!!!

ரஷ்யப் படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள மருத்துவமனைகளுக்கு அவசரமாகத் தேவைப்படுகின்ற ஜெனரேட்டர்களை கொண்டு சேர்ப்பதற்கு போராடிக் கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலையுடன் தெரிவித்திருக்கிறது. மரியுபோலில் சுகாதார அமைப்புகள் மிகவும் மோசமாக கடுமையாகி பாதிப்புக்குள்ளாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தநிலையில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளில் குறைந்தபட்சம் மின்னாற்றல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த ஜெனரேட்டர் கள் உதவுகின்றன. ஆனால் ரஷ்யாவின் தாக்குதலால் கடுமையாக பாதிப்புக்குள்ளாக இருக்கும் அந்த பகுதிக்கு இப்போதைய ஜெனரேட்டர்களை கொண்டு செல்ல முடியவில்லை. சாதகமான நிலைமை, சற்று அணுகூலமாக அமைந்த உடன்  அவற்றை எடுத்து செல்ல வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராக இருக்கிறோம் என செய்தி தொடர்பாளர் பானு பட்னாகர் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு செய்தித் தொடர்பாளர் பானு பட்நாகர், உக்ரைனின் பாதிப்புக்குள்ளான லீவ் நகரில் இருந்துகொண்டு, ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் வீடியோ இணைப்பு மூலம் பேசியுள்ளார். அப்போது  அவர் கூறியிருப்பதாவது, “மேற்கு நகரமான எல்விவ் தளத்தில் இருந்து, உக்ரைன் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு 15 ஜெனரேட்டர்களை  வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இரண்டு ஜெனரேட்டர்கள் கிழக்கு நகரமான கார்கிவ் நோக்கிச் செல்ல இருந்தன. கிழக்கில் லுகான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளுக்கு 3 ஜெனரேட்டர்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் இரண்டு ஜெனரேட்டர்கள் மரியுபோலில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருக்கிறது. இப்போதைக்கு அங்கு கொண்டு செல்ல முடியவில்லை. நிலைமை அணுகூலமாக அமைந்த உடனேயே அவற்றை எடுத்து செல்ல வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயாராக இருக்கிறோம்.
மரியுபோலில் மட்டும், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற முடியாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுகின்றது. இதுபோன்ற சூழ்நிலைகளில், பொதுவாக மருந்து மூலம் சிகிச்சையளிக்கக் கூடிய சாதாரண நோய்கள் கூட உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையாக மாறும்”  என கூறியுள்ளார்.

Categories

Tech |