Categories
உலக செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா போர்….. உருக்குலைந்த கிராமங்கள்…. கட்டியெழுப்பும் உக்ரைன் இளைஞர்கள்……!!!!

உக்ரைன் மீது ரஷ்யா 150 நாட்களைக் கடந்து போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் உக்ரைன் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றிலுமாக நாசமாகி கிடைக்கிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் இளைஞர்கள் உருக்குலைந்த தங்களின் கிராமங்களை மீண்டும் கட்டி எழுப்பி புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர்.

அதனை தொடர்ந்து வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களுக்கு அருகே இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தன்னால்வலர்களை ஈர்த்து கட்டிடங்கள சீரமைத்து வருகின்றனர். இதனைய்டுத்து இளைஞர்கள் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் களைப்பு தெரியாமல் உற்சாகத்துடன் பல மணி நேரம் வேலை பார்க்க முடிவதாக தன்னார்வலர்கள் கூறுகின்றனர். மேலும் வேலைக்கு நடுவில் தாங்களும் பாட்டு பாடி, நடனமாடி உற்சாகம் அடைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |