உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது எட்டு மாதங்களை தாண்டி நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் தரைமட்டமாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைனிடமிருந்து கடந்த 2014 ஆம் வருடம் ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் முக்கிய பாலத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்று உள்ளது. இதில் அந்த பாலம் பலத்த சேதம் அடைந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிர படுத்த இருக்கிறது.
இந்த நிலையில் போர்களை உடனடியாக உலக நாடுகள் நிறுத்த வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள twitter பதிவில் கூறப்பட்டுள்ளதாவது, உக்ரைன் ரஷ்யா இடையேயான போரை உலக நாடுகள் தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும். கடல் தட்டும் கண்டத்தட்டும் முட்டிக் கொள்வதனால் உருவாகும் சுனாமி உலக கரைகளை எல்லாம் உலுக்குவது போல் இந்த போர் உலக நாடுகளின் கஜானாவை பிச்சை பாத்திரம் ஆக்கி விடும். மேலும் 2023 ரத்தக்கசிவோடு பிறக்கும் போரை நிறுத்துங்கள் என கூறியுள்ளார்.