உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் கடந்த 18 நாட்களாக நீடித்து வருகிறது. இதனால் அங்குள்ள இந்திய மாணவர்கள் தங்கள் தாய் நாடுகளுக்கு திரும்புகின்றனர். மேலும் உக்ரைன் மக்கள் போர் காரணமாக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்த போரில் உக்ரைன்-ரஷ்யா என இருதரப்பிலும் பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போரால் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார மாற்றம், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத்சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.